கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 ஊழியர்களுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.