வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த நடவடிக்கை நாளை(18) மாலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.