வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஆஸ்திரியா ) – ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன,

அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டு ஏனையோரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.