கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 563 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7,186 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.