(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று(10) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில்;
புளுமென்டல்-4
பொரள்ளை-5
தெமட்டகொட-17
கிரான்பாஸ்-32
கெசல்வத்த-25
கிருலப்பனை-4
கொள்ளுப்பிட்டிய-55
வெல்லம்பிட்டிய-1
மாளிகாவத்த-20
தெஹிவளை-1
கொட்டாஞ்சேனை-11
மருதானை-20
மட்டக்குளிய-8
மிரிஹான-1
கொலன்னாவை-7
முகத்துவாரம்-4
கல்கிஸை-7 மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.