யாழினில் அகதிகளாக சிறார்கள்!

சர்வதேச சிறுவர் தினமான இன்றும் வலி வடக்கு அகதிமுகாங்களில் 1,150 சிறுவர்கள் அகதிகளான வாழ்ந்து வருகின்றனர்.இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் 26 முகாங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் ஆயிரத்து 26பேர் சிறுவர்களாவர்.

இந்த சிறார்களது நலன்கள் தொடர்பினிலோ கல்வியை மேம்படுத்தும் வித்திலோ எந்தவிதமான உதவித்திட்டங்களும் கிடைத்திருக்கவில்லையெனக்கூறப்படுகின்றது.குறிப்பாக புலம்பெயர் நாடுகளது நிதியை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களிற்கு சிறுசிறு தவிகளை வழங்கி கண்காட்சிப்பொருட்களாக்கி கொண்டிருப்பதாகவும் நீண்ட கால திட்டமிடல்கள் ஏதும் அவர்களாலோ வடமாகாணசபையாலோ முன்னெடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.