நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.