ஷானிக்கும் கொவிட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைக் கைதியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மஹர சிறைச்சாலையில் சிறைக் கைதியாவார்.

தொற்று உறுதியான பின்னர் இவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.