(ஃபாஸ்ட் நியூஸ் | தென்னாபிரிக்கா ) – பிரித்தானியாவைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, தென்னாபிரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தந்த இருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தென்னாபிரிக்காவில் இருந்து பயணிகள் வருகை தருவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
அத்துடன், கடந்த 10 நாட்களில் தென்னாபிரிக்காவில் இருந்து அல்லது தென்னாபிரிக்காவின் ஊடாக பயணித்த நபர்களுக்கு பிரித்தானியாவுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்வாறான பயணங்களில் ஈடுபட்ட பிரித்தானிய பிரஜைகளுக்கு நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு 10 நாள் சுய தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.