நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(05) திங்கள் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
(riz)

