மரண தண்டனைக்கு பதிலாக ஆண்மையினை இல்லாமல் செய்க – வாசுதேவ

மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளிகளின் ஆண்மையினை இல்லாமல் செய்யுமாறு ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும், எதிர்க்கட்சி உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்னும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவளிக்க முடியாதெனத் தெரிவித்த இவர்,

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்வதே மிகச் சிறந்தது என்ற ஆலோசனையினை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(6) இடம்பெற்ற மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு ஆலோசனை முன்வைத்தார்.