இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்

பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இஸ்லாமாபாத்தில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்;

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பே கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக பேசி வருகிறது. ஆனாலும் வாய்ப்பு மங்கியே காணப்படுகிறது. என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை டிசம்பர் – ஜனவரி மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த தொடருக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இந்திய அரசின் முடிவுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்தும் காத்திருக்கிறது.