விண்ணப்பங்கள் 35 சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் குழுவிற்கு அனுப்பப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.