ஆடுகளம் (பிட்ச் ) குறித்து அண்மையில் லசித் மாலிங்க வெளியிட்டிருந்த கருத்தும் தற்போது சூடுபிடித்துள்ளது. அது, காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் பிட்ச் மாற்றிய சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல் ஜசீரா தொலைக்காட்சியின் பேட்டியின் நிமித்தமே. இதன்படி, அல் ஜெசீரா தொலைக்காட்சியின் வெளியிடப்பட்ட ஆதாரங்கள் லசித் மாலிங்கவின் கருத்துக்கு ஒத்துப் போவதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர்.
அண்மையில், அல் ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய, காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் பிட்ச் மாற்றம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
அத்துடன் குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை வேலைநிறுத்தம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.