BBS பொதுச்செயலாளருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு (VIDEO)

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மூன்று முறைப்பாடுகள்நேற்று இலங்கை பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹியங்களை பிரசதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது பொலிஸாருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, கலவரம் ஏற்படுத்தியமை மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் கடிதம் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூருதீன் தலைமையிலான RRT சட்டத்தரணிகள் அமைப்பு இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=GiTzcDUuad4″ width=”560″ height=”315″]