BPLபோட்டிகள் ஒத்திவைப்பு…

ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2018ம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டியினை எதிர்வரும் ஜனவரி வரையில் ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டோபர் மாதம் தொடக்கத்தில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Rishma