(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 787 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது,
மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
