யோஷித ராஜபக்ஷ இனது தலைமையிலேயே CSN தொலைக்காட்சி இயங்கி வந்ததாக ஊழல் எதிர்ப்பு முன்னணி அண்மையில் சாட்சியங்களை வெளியிட்டது.
அவையாவன,
1.விளையாட்டு அமைச்சிலிருந்த நிரந்தர செயலாளர் ஒருவரால் (கணேகல அவர்களால்) யோஷித ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்த கெபினட் ஆவணத்தின் இல. 05/12/2011
2.CSN தொலைக்காட்சி வளாகத்தில் காற்றுச்சீரமைத்தல் கருவி பொருத்தும் ஒப்பந்தத்தை வாங்கிய யுனைடட் இலக்றிகல் எஞ்சினியரிங் சங்கத்தின் (United Electrical Enginearing) சார்பில் நிஹால் நாணயக்கார அவர்கள் ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட்டதும் யோஷித ராஜபக்ஷவுடனேயே.
3.CSN தொலைக்காட்சியுடன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் ரிச்சட் சொய்ஸா அவர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கை.
CSN நிறுவனத்தை பதிவு செய்தலின் போது இரண்டு முகவரிகள் வழங்கப்பட்டுள்ளது.
இல.21, ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள செமா கட்டிடம் (இது ஒரு அரச சொத்தாகும்)
260/2, டொரிண்டன் ஒழுங்கையிலுள்ள, கொழும்பு 07.வீடு. இக்குறித்த வீடானது மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 2000ம் ஆண்டு வசித்த வீடாக உள்ள அதேவேளை ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான “சிரிலிய சவிய”, மற்றும் இன்னுமொரு அமைப்பின் பெயரும் குறித்த முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்கள் இவ்வாறிருக்க, CSN தொலைக்காட்சி நிறுவனம் குறித்த விசாரணையில் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோரை நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கலின் பிரதிபலனா..?