DNA பரிசோதனைக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்ட “கொண்டயா”வின் சகோதரர்

சிறுமி சேயாவினது பாலியல் வந்புனர்வுக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர் பொரளையில் உள்ள ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தானே கொலையை செய்தாக வாக்குமூலம் அளித்த “கொண்டையா” எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சமன் ஜெயலத் நேற்றைய தினம் தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபருக்கு மரபணு பரிசோதனை (DNA) செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதன்படி அவர் இன்று பொரளையிலுள்ள ஜின்டேன் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

(riz)