DNA மாதிரிகள் பொருந்தவில்லை

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகையால், அவ்விருவரையும் விடுதலை செய்வதற்கு அவர்களை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில், முதலாவதாக கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்