ETI நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரின் வௌிநாட்டுப் பயணங்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய பணிப்பாளர்கள் 4 பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டுப் பயணத்தடை தொடர்பில் உடனடியாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.