facebook தற்காலிகத் தடை தொடர்பில், fb நிறுவனத்தின் நிலைப்பாடு…

நாட்டில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் தனது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இனமுறுகலை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

 

Rishma