28வது FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கண்காட்சி மூலம் நாட்டின் பல்வேறு தரங்களிலும் உள்ள உள்நாட்டுக் கைத்தொழிலை ஒரே மேடைக்குக் கொண்டுவரும் நிகழ்வும் இங்கு இடம்பெறும்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் அனுசரணை வழங்குகின்றன.