FCID முறையாகவே நிறுவப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு..

நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) முறையாகவே நிறுவப்பட்டுள்ளது என்று கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அது , அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.

காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவு சட்டரீதியான நிறுவனம் அல்ல என ஜயந்த சமரவீர சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதற்கு முன்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பூர்வாங்க ஆட்சேபனை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் , காவற்துறை மா அதிபரின் அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகையால் காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவு சட்டரீதியானது என கொழும்பு – கோட்டே நீதவான் தெரிவித்திருந்தார்.