நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் மேலதிக செயலாளர் காமினி செனரத், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் அனுச பெல்பிட்ட உள்ளிட்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் அதிகமானோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
காமினி செனரத் உள்ளிட்ட பலர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஞாயிறு தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிட்டு செல்கின்றனர்.
பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள பலர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.