FIFA வின் மூத்த அதிகாரிகள் அறுவர் கைது

பல மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், வாங்கியதாகவும் இலஞ்சக் குற்றம் புரிந்தமைக்காக சர்வதேச கால்பந்து நிறுவனமான ஃபிஃபாவின் (FIFA) 6 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்து பொலிஸாரால் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளுக்காக அவர்களை அமெரிக்காவிற்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டுள்ளது