G-7 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஜப்பான் செல்கின்றார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள 42வது ஜீ7 மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஜின்சோ அபேவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் முதலாவது இலங்கை அரச தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே இந்த ஜீ.7 அமைப்பாகும். உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் இந்த மாநாட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

இந்த விஜயத்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.