GMOA’இனது முன்னாள் செயலாளரது கருத்து குறித்து CID விசாரணை..

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க முன்னாள் செயலாளர் டொக்டர் நவின் டி சொய்சா இனது கருத்து குறித்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தப்பட உள்ளது.

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறையினர் முறையற்ற விதத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற டொக்டர் நவீன் டி சொய்சா, கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மாணவர்கள் ஆயுதம் ஏந்த நேரிடும் என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)