GMOA சங்கத்தின் தலைவர் அனுரத்த’வுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுரத்த பாதெனியவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர்களான சரத் விஜேசூரிய, காமினி வெயங்கொட ஆகியோரால் குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற சைட்டத்துக்கு எதிரான மக்கள் அலை எனும் தொனிப்பொருளில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு நீதிமன்றை அவமதித்ததாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றும்போது, சைட்டம் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் விமர்சித்ததன் ஊடாகவும் மேலும் சில கருத்துக்களை வெளியிட்டதன் ஊடாகவும் இவ்வாறு நீதிமன்றை அவமதித்ததாக இதன் போது மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்றை அவமதித்த அவரது கருத்து தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் அவ்வாறு நடைபெறாது இருப்பதை உறுதி செய்ய அவருக்கு உரிய தண்டனையை வழங்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)