அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அரச பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து குறித்த இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இது குறித்து தெரிவிக்கையில்;
“.. தங்களின் இந்த பிரச்சினைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பல தடவைகள் பேசியுள்ள போதும், இதுவரையில் அதற்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#reeshma..