GMOA நாளைய தினம் அடையாள வேலை நிறுத்தத்தில்..

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் நாளைய தினம் குருநாகல்,கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலே நாளைய தினம் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சங்கத்தின் மருத்துவர்கள் சிலர் இன்று காலை இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமை சந்திக்க முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.