அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமான, Google நிறுவனமானது பிறந்து 18 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 18 வருடங்களில் நாம் இணையத்தைப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது Google..
தற்போது, Google தேடல்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் நோக்கில் புதிய அம்சமொன்றை Google நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
கூகுளில் பிரபல நட்சத்திரங்களைத் (celebrities) தேடினால் வழக்கமான சொல் வடிவில் பதில்களை வழங்காமல், செல்பி காணொளி வடிவில் பதில் வழங்கும் புதிய வசதியை, Google ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் பிரபலங்களிடம் கேள்விகளை கேட்கும் போது செல்பி காணொளி மூலம், பதில் வழங்கும் வசதியை அது ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக நடிகர் ஒருவரிடம் ஏதேனும் கேள்வி கேட்க விரும்பினால்,அந்தக் கேள்விகளுக்கு செல்பி காணொளி வடிவில் பதில் அளிக்கப்படும். தற்சமயம் இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சத்தின் மூலம் தொலைபேசியின் தேடல்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே பதில் பெற முடியுமென கூகுளானது வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#reesh