Gota Go Gama- போராட்டக்களம் இன்றுடன் 50 நாள் பூர்த்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  Gota Go Gama : கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரும் தொடர் போராட்டம், இன்று 50 நாளை பூர்த்தி செய்கிறது. Gota Gohome – விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் 50 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏப்ரல் – 09 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் இந்த போராட்டத்துக்கு தொடர்ந்தும் உற்சாகம் பெருகி கொண்டே இருக்கின்றது.
காலிமுகத்திடலில் க்கு முன்னால் அமைந்திருக்கின்ற ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால், தன் எழுச்சியுடன் தொடரும் இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இலங்கையர்கள் முழுமையான ஒத்தாசை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

போராட்டக் களம் 50 நாளை பூர்த்தி செய்யும் இன்றைய தினத்தில்,வழமைக்கு மாறாக இன்று நாடு முழுவதிலும் இருந்து வருகை தரும் மக்கள், போராட்டக் களத்தில் சங்கமிக்கிறார்கள்.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் திரளும் மக்களுக்காக குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தொண்டர்கள் வழங்கி வருகின்றார்கள் என்று போராட்டக்கள தொண்டர் ஒருவர் கூறினார்.

இதை விடவும், போராட்டக்களத்தில், ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் இந்தப் போராட்டத்தின் இலக்கு நோக்கிய பயணம் தொடர்பான விளக்கங்களும் காலி முகத்திடலில் மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. அறவழியில் தொடரும் இந்த இளைஞர், யுவதிகளின் போராட்டகளம்,அரசியல் குண்டர்களால் தாக்கிய அளிக்கப்பட்டாலும், சிந்திய இரத்தத்துடனும் காயங்களுடனும் இடையூறின்றி தொடரப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி ஆளும் தரப்பு அனுசரணையில் நடத்தப்பட்ட காடைத்தனம்களுக்கு அஞ்சாது, அடிபணியாது மேலும் ஊக்கத்துடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த வகையிலும் இந்தப் போராட்டத்திற்கும், போராட்ட களத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டிருக்கிறார். கொட்டும் மழையிலும், கொதித்தெறியும் அக்கினி வெயிலிலும் தொய்வின்றித் தொடரும் இந்த மக்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்.