(FASTGOSSIP| COLOMBO) – மின்னஞ்சல் ஊடாக கணினி/மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சில மாதங்கள் கணினி/ தொலைபேசி ஊடாக பரிமாறப்பட்ட தகவல்கள் நடவடிக்கைகள் தொடர்பிலான பிரதிகள் தற்போது ஹெக்கர்ஸ்’களிடம் உள்ளதாக தெரிவித்து மின்னஞ்சல் ஊடாக செய்திகள் கிடைக்கப்பெறுவதாக இலங்கை மொழிபெயர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு குறித்த தரவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதாகக் கோரி கப்பம் கோரும் பண வழிமுறையொன்று bitcoin ஊடாக ஊடுருவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மின்னஞ்சல் செய்திகள் இலங்கையர்கள் அநேகமானோருக்கு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் இது தொடர்பில் வீணாக அஞ்ச வேண்டாம் என இலங்கை மொழிபெயர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் கணக்கு அல்லது கணினி எச்சந்தர்ப்பத்திலும் முடக்கப்பட்டில்லை என்றும் இது கப்பம் கோரும் குழுவினால் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
