Hair conditioner வைத்து இவ்வளவு வேலைய செய்யலாமா?

அனைவரது வீட்டிலும் சரும பராமரிப்பு பொருட்கள் மட்டுமின்றி, தலைமுடி பராமரிப்பு பொருட்களும் கட்டாயம் இருக்கும். குறிப்பாக தலைமுடியின் மென்மையை அதிகரிக்கும் ஹேர் கண்டிஷனர் நிச்சயம் இருக்கும்.

ஹேர் கண்டிஷனர்களை நாம் பலவாறு பயன்படுத்தலாம். ஒரு ஹேர் கண்டிஷனரைக் கொண்டு எம்மாதிரியான பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என்பதை பற்றி பார்க்கலாம்…

பளபளப்பான சப்பாத்து:
நீங்கள் அணியும் சப்பாத்துக்களில் வெள்ளை நிற கோடுகள் அசிங்கமாக காணப்பட்டால், அதனை வீட்டில் உள்ள ஹேர் கண்டிஷனர்களைக் கொண்டே எளிதில் நீக்கலாம். எனவே வீட்டில் சப்பாத்து பாலிஷ் செய்யும் க்ரீம்/நீர்மம் காலியாகிவிட்டால், ஹேர் கண்டிஷனர் கொண்டு பளபளபாக்குங்கள்.

சுருங்கிய துணி:
உங்களது விருப்பமான உடையை சலவை இயந்திரத்தில் போட்டு துவைத்த பின், அது சுருங்கி அசிங்கமாக காட்சியளிக்கிறதா? கவலைப்படாதீர்கள். ஒரு வாளி நீரில் 1 டேபிள் ஸ்பூன் கண்டிஷனர் சேர்த்து கலந்து, அதில் சுருங்கிய துணியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிழிந்து காயப் போடுங்கள். இதனால் துணி சுருக்கம் போய்விடும்.

ஹேண்ட் wash:
ஹேர் கண்டிஷனர் உங்களது தலைமுடியை மட்டும் தான் மென்மையாக்கும் என்றும் நினைக்காதீர்கள். கையால் துணியைத் துவைத்த பின், சிறிது கண்டிஷனரை கையில் விட்டு தேய்த்துக் கழுவுங்கள். இதனால் துணி சவர்காரத்தால் கைகள் வறட்சியடைவதைத் தடுத்து, கைகளைப் பட்டுப் போன்று மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

கைவிரல் மோதிரம்:
கைவிரலில் மோதிரம் சிக்கிக் கொண்டதா? அப்படியானால் சவர்க்காரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக கண்டிஷனரை மோதிரத்தைச் சுற்றி தடவிக் கொண்டு, பின் மென்மையாக கழற்றுங்கள். இதனால் மோதிரம் எளிதில் வெளியே வந்துவிடும்.

மேக்கப் ரிமூவர்:
ஹேர் கண்டிஷனரைக் கொண்டே மேக்கப்பை நீக்கலாம். இதனால் மேக்கப் எளிதில் வந்துவிடும். மேலும் சருமமும் பாதிக்கப்படாமல் சுத்தமாகவும் பட்டுப் போன்றும் இருக்கும்.

கதவு சப்தம்:
கதவுகளில் இருந்து சப்தம் வந்தால் க்ரீஸ் பயன்படுத்துவீர்களா? க்ரீஸ் பயன்படுத்தி கதவுகளின் அழகைக் கெடுப்பதற்கு பதிலாக, குளியலறையில் உள்ள ஹேர் கண்டிஷனரை கதவுகளில் தடவுங்கள். இதனால் கதவுகளில் இருந்து வரும் சப்தங்கள் உடனே நின்றுவிடும்.

அசிங்கமான விரல் நகங்கள்:
உங்கள் விரல் நகங்களின் முனைகளில் அசிங்கமாக தோல் வெளியே தெரிகிறதா? அதைப் போக்கி உங்கள் விரல் நகங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு அதை பிடுங்குவதற்கு முன்பு, ஹேர் கண்டிஷனரை விரல் நகங்களில் சிறிது நேரம் தேயுங்கள். இதனால் விரல் நகங்கள் அழகாக காட்சியளிக்கும்

அடைப்புக்கள்:
வீட்டு சமையலறையில் அழுக்கு நீர் செல்லும் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டிருந்தால், அந்த குழாய்களில் சிறிது ஹேர் கண்டிஷனரை விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து நீரை ஊற்றுங்கள். இதனால் அடைப்புக்கள் நீங்கி, குழாய்களில் நீர் தடையின்றி வெளியேறும்.