அமைச்சர் துமிந்த திசாநாயக்க உடன் தனக்கு இருந்தது உன்னதமான காதல் என்றும், அது ஒருபோதும் பொய்யாகாது எனவும், ஒருபோதும் கணவன் – மனைவி என்ற உறவு இருந்தது இல்லை எனவும் நடிகை மதுஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ முகநூல் தளத்திலும் பதிவு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.
‘HIV எனின் அது பரவ வேண்டியது முன்னாள் மனைவிக்கா அல்லது காதலிக்கா? துமிந்தவுக்கு அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் இல்லை… கூட்டு எதிர்க்கட்சி பெயர்களை தப்பாக கூற வேண்டாம்.. எனக்கும் துமிந்தவுக்கும் இடையே உள்ளது உன்னதமான காதல். நான் துமிந்தவின் அரசியலில் இருந்து ஒதுங்கி கூட்டு எதிர்க்கட்சியுடன் கைகோர்த்தது நாட்டில் உள்ள பொதுமக்களின் நலன் கருதியே அன்றி வேறொன்றுமில்லை.. கூட்டு எதிர்க்கட்சியில் கைகோர்த்ததன் பின்னர் அது குறித்து எனக்கு துமிந்த எந்தவித தடைகளையும் விதிக்கவில்லை..’ எனவும் தெரிவித்துள்ளார்.