I Touch Myself Project 2018 என்னும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக I Touch Myself என்ற புகழ்பெற்ற பாடலை நிர்வாணமாக பாடி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் தனது மார்பகங்களை கைகளால் மறைத்தப்படி உட்கார்ந்து கொண்டு பாடலை அவர் பாடுகிறார்.
இது குறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால் அதை செய்ய விரும்பினேன். மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.
இது குறித்த வீடியோவானது இணையத்தில் சுமார் 20 இலட்சம் பேரை கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த வீடியோ