ICC இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக பெப் டூ பிளசிஸ் குற்றச்சாட்டு…

சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக தென்னாபிரிக்க வீரர் பெப் டூ பிளசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெங்களுர் போட்டியின் போது, அவுஸ்ரேலிய அணி தலைவர் ஸ்டீவ் சுமித் மற்றும் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லியும் செயற்பட்ட விதம் ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபை, அது சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய செயல் அல்லவென குறிப்பிட்டிருந்தது.

அவுஸ்ரேலிய அணியுடனான ஒரு போட்டியின் போது தென்னாபிரிக்க வீரர் பெப் டூ பிளசிஸ், பந்தின் மீது சுவிங்கத்தை ஒட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அவர் மறுத்திருந்த போதிலும், அவருக்கு அபராதமாக போட்டி ஊதியத்தில் 100 % குறைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் சபை இரண்டை செயற்பாட்டை கையாள்வதாக பிளசிஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

 

(rizmira)