ICC முன்னிலையில் தலைகுனிவு – குற்றத்தினை ஒப்புக் கொண்டால் வீரர்களை மன்னிக்கத் தயார்..

கிரிக்கெட் ஊழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மிக மிக மோசமாகத் திகழ்கிறது என்று ஐசிசி மதிப்பிட்டுள்ளது துரதிர்ஷ்டம் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது;

“.. துபாய் கூட்டத்தின் போது தன்னிடம் ஐசிசி இந்த இரகசிய அறிக்கையை காண்பித்தது, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஊழல் மிகுந்தது என ஐசிசி தரமதிப்பீடு செய்துள்ளது.

தவறு செய்தவர்கள் விவரங்களை அளித்து ஒப்புக் கொண்டால் ஐசிசி வீரர்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்..” அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

2017 லீக் ஒன்றில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தில்ஹாரா லொகுஹெட்டிகே ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.