முன்னாள் அமைச்சர் ரோஹித அபயகுணவர்த்தன சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரோஹித இன்று உயர்நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றுக்காக ஆஜராகவுள்ளார்.
கடந்த 2004.03.31 – 2006.05.31 இடையேயான காலப்பகுதிக்குள் ரோஹித அபேகுணவர்த்தனவின் சொத்து மதிப்பு திடீரென்று 412 லட்சங்கள் அதிகரித்திருந்தது.
எனினும் அவரது வருமானத்தின் பிரகாரம் அந்தளவு சொத்தை அவர் சேகரித்திருக்க முடியாது.இது குறித்து இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு ரோஹித அபேகுணவர்த்தனவுக்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகளுக்காக இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரோஹித அபேகுணவர்த்தனவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.