IPL தொடக்க விழாவில் பிரபல நடிகை எமி ஜாக்சன் நடனக் களத்தில்….

ஐதராபாத்தில் இன்று(05) தொடங்கும் IPL தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடவுள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் IPL போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போன்று இந்தாண்டிற்கான 10-வது IPL தொடர் இன்று தொடங்கி மே மாதம் 21 ஆம் திகதி வரை நடக்கிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன. இத்தொடரில் தொடக்க தினமான இன்று பிரபல நடிகை எமிஜாக்சன் நடனமாடவுள்ளார்.

சில இந்திப் பாடல்களுக்கு அவர் ஆறு நிமிடம் நடனமாடுகிறார். இதே போல IPL போட்டியின் இறுதி நாள் அன்றும் ஆடுவதற்கு அவரிடம் பேசியுள்ளதாகவும், ஆனால் அவர் தற்போது வரை சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் ராஜ்கோட்டில் நட்சத்திர விடுதி ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் நுழைவு வாயில் முதல், விடுதியின் ஒவ்வொரு அறையிலும் வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

ராஜ்கோட்டில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலும் இங்கு தான் தங்குவார்கள் என்பதால் இந்த முடிவு என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.

(rizmira)