IPL – பஞ்சாப் அணியில் அம்லா தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) முதுகுவலி காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 33 வயதான ஹஷிம் அம்லா பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல். ஏலத்தின் போது ரூ.1 கோடிக்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட அம்லா ஏலம் போகவில்லை. இதுவரை ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடியது கிடையாது.