IPL போட்டிகள் சில சூரியவெவ மைதானத்தில்…

(FASTGOSSIP| COLOMBO) – இந்தியன் பிரீமியல் லீக் போட்டித் தொடர்களை எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நடாத்த ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்காக ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தினை பயன்படுத்த ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.