IPL போட்டிக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மே 24-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் சபை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒரே மைதானத்தில் பார்வையிடுவார்கள்.

இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் இருந்தால், இந்த வைரஸ் வேகமாக பிறருக்கு பரவ தொடங்கிவிடும். இதனால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படக் கூடும் என கூறப்பட்டுள்ளது.