IPL போட்டி – சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்..

(FASTGOSSIP|COLOMBO) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 6 ரன்கள் எடுத்தபோது, ஐ.பி.எல் போட்டியில் விரைவாக 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கடந்த கிறிஸ் கெய்ல் சாதனை படைத்துள்ளார்.

2019 ஐபிஎல் சீசனில் 4-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் நாணய சுழற்சி வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினர்.

கிறிஸ் கெய்ல் 6 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் 4 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த 9-வது வீரர் என்ற பெருமையையும், 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன் டேவிட் வார்னர் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.