ISIS அமைப்பின் தலைவர் ஓமர் உயிரிழந்துள்ளதாக அவ்வமைப்பு உறுதி

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவராக குறிப்பிடப்பட்ட ஒமர் ஷிஷ்ஷானி உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தற்போது உறுதி செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் விமான தாக்குதல் ஒன்றின் போது ஒமர் ஷிஷ்ஷானி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், ஐ . எஸ் அமைப்பு அதனை உறுதி செய்யவில்லை.

எவ்வாறாயினும் தீவிரவாத அமைப்பான ஐ . எஸ் அமைப்பு தற்போது இதனை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.