ISIS இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படும் கேரளா தம்பதி இறுதியாக இரண்டு மாதங்கள் இலங்கையில்..?

ISIS இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படும் கேரளா தம்பதி இறுதியாக இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாத்திமா (நிமிஷா), ஈஷா (பேசோன் வின்சன்ட்) ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள ஸலபி இஸ்லாமிய போதனை வகுப்புகளில் கலந்து கொண்ட பின்னர், காணாமல் போயுள்ளதாக இந்திய புலனாய்வு துறையை மேற்கோள் காட்டி நியூ இந்தியா எஸ்பிரஸ் (New Indian Express) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும், அவ்வாறான இருவர் இலங்கைக்கு வருகை தந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறித்த ஊடகத்திடம் மறுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அல்லாதவர்கள் ஸலபி இஸ்லாமிய போதனை வகுப்புகளில் கலந்துகொள்வதாக எந்த தகவல்களும் இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் முபாரக் மௌலவி தெரிவித்ததாக நியூ இந்தியா எஸ்பிரஸ் (New Indian Express) தெரிவித்துள்ளது.