கடந்த மே 8 ஆம் திகதி வெளியான ஜே.வி.பி. இனது தலைமைத்துவம் குறித்து பிரசுரமான திவயின வார இதழின், 14 ஆம் பக்கத்துக்கு பொறுப்பான பிரதி ஆசிரியர் மனோஜ் அபயதீர தனது பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
விசேட எழுத்தாளர் ஒன்றினால் எழுதப்பட்ட “இடது சாரி அரசியலின் புதிய இரகசியங்கள்” எனும் தலைப்பில் வெளியான மக்கள் விடுதலை முன்னணி குறித்த கட்டுரையினை தான் பொறுப்பேற்பதாக தெரிவித்தே இவர் இராஜினாமா செய்துள்ளதாக அப்பத்திரிகை இன்று(12) அறிவித்துள்ளது.