KYANT சூறாவளியினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பில்லை..

மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த வலுவான தாழமுக்க நிமைமை தற்போது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.

இதற்கு மியன்மாரினால் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் கயன்ற் என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த சூறாவளியினால் இலங்கைக்கு உடனடி பாதிப்புகள் எவையும் இல்லை.

எனினும் இன்று பிற்பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.