ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இனது விசேட வெற்றிக்கு இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பதாவது,ரஷ்யா ஜனாதிபதியின் புதிய பதவிக் காலத்துடன் ரஷ்யாவின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கையில், ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்பினை தொடர்ந்தும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

